கட்டுநாயக்கவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை ஏன்? பொலிஸார் விளக்கம்

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நோயாளிகளை தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனாவை தடுப்பதற்கான கட்டளைச் சடத்திற்கு அமைய, சுகாதார சேவை பணிப்பாளர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீள் அறிவிப்பு வரை அமுல்படுத்தவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்திலள்ள 14 பொலிஸ் பிரிவுகளிலும், 12 களனி பொலிஸ் பிரிவுகளும் நீர்கொழும்பின் 2 பொலிஸ் பிரிவுகளிலும் மீள் அறிவிப்பு வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like this video