பேருந்தொன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்திற்கு அருகில் பேருந்தொன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில், இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கிண்ணியா - ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த தர்மசேன நித்தியானந்தன் (36 வயது) என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்தொன்று பணியாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த போது குறுக்கே வந்த மோட்டார்சைக்கிள், பேருந்துடன் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

விபத்து தொடர்பில் மூதூர் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.