ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவு ஆர்ப்பாட்டம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை சென்று அங்கு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - முறிப்பு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் அண்மையில் தாக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தை வெளியிட்டு வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.