சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதியில் 20 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் - பதினாறாம் கொலனி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய குறித்த சந்தேகநபர் கசிப்பு உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தம்பலகாமம் விசேட பொலிஸ் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், 20 சட்டவிரோத மதுபான போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஏற்கனவே பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும், இவருக்கு எதிராக வழக்குகள் கந்தளாய் நீதிமன்றில் இடம்பெற்று கொண்டிருப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.