இலங்கையில் இளநீரில் தயாரிக்கப்படும் போஷாக்கான உணவு!!!

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தைச் சேர்ந்த டைகூன் குழு, ஒரு புதிய உணவு உற்பத்தித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இளநீரைப் பயன்படுத்தி போஷாக்கான மற்றும் சுவையான ஜெலி தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கு நூறு வீதம் இயற்கை உற்பத்தியாக இந்த ஜெலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஜெலியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயற்கை பொருட்களும் அல்லது இரசாயனங்களும் இல்லை என இந்த குழு குறிப்பிட்டுள்ளது.

அடிப்படை பொருட்களாக இளநீர், அதன் கொழுப்பு, சர்க்கரை மற்றும் ஜெலட்டின் ஆகிய பொருட்கள் மாத்திரமே பயன்படுத்தி இந்த ஜெலி தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இளநீரில் பாக்டீரியா, விட்டமீன்கள் உள்ளிட்ட பல வைட்டமின் சத்துக்களே அடங்கியுள்ளன.

ஜெலட்டினில் உள்ள சத்துகள் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவதற்கும் செரிமானத்தை எளிதாக்குவதற்குமான திறனை கொண்டுள்ளதன் காரணமாக இந்த குழு குறித்த தயாரிப்பை அறிமுகப்படுத்தியதென தெரிவிக்கப்படுகின்றது.