பணியாளருக்கு கொரோனா! கொழும்பு மாநகரசபையின் அலுவலகமொன்று மூடப்பட்டது

Report Print Ajith Ajith in சமூகம்

பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து கொழும்பு டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள கொழும்பு மாநகரசபையின் அறக்கட்டளை ஆணையாளர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்திய கலாநிதி ருவான் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொற்றுக்கு இலக்கானவரின் குடும்ப உறுப்பினர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தொற்றுக்கு உள்ளான பணியாளர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அறக்கட்டளையின் ஆணையாளர், மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்கவின் தலைமையில் நகர மண்பத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்று திரும்பியுள்ளார்.

எனவே அவர் மற்றும் மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க உட்பட்டவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்திய கலாநிதி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.