யாழில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 117 பேர் விடுவிப்பு

Report Print Sumi in சமூகம்
61Shares

யாழ்ப்பாணம் விடத்தல் பளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 117 பேர் இன்று அவரவர் வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கட்டாரில் இருந்து, நாட்டிற்கு அழைத்து வரப்பட்டவர்களில் 117 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த 45 நாட்களாக யாழ்ப்பாணம் விடத்தல் பளையில் உள்ள 52ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அவரவர் வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 117 பேரும் 52ஆவது படைப்பிவின் பிரிகேடியர் கே.லியனகே தலைமையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சான்றிதழ்களுடன் இன்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும், கண்டி, குருநாகல் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.