கொரோனா தொற்று தொடர்பான விதிமுறைகளை பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படும்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட செயலாளரின் வழிகாட்டலில் மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்கள் ஏற்படும் போது நடைமுறைப்படுத்த உள்ள முன்னேற்பாடுகள் தொடர்பான விஷேட மாநாடு இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது வெள்ள அனர்த்தம் மற்றும் டெங்கு நோய் தொடர்பாகவும், கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

டெங்கு நோய் விழிப்புணர்வு நடவடிக்கையில் பிரதேசசபையும், பிரசே செயலகமும் இணைந்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து செயல்படுவது என்றும் கொரோனா தொற்று தொடர்பான விதிமுறைகளை பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முறையாக நடைமுறைப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேசசபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஏ.எஸ்.எம்.சியாத், வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜயசுந்தர, ஓட்டமாவடி மிருக வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சுரேந்திரன், வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.ரியாஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பள்ளிவாயல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.