இ.போ.ச பேருந்தின் மீது முறிந்து விழுந்துள்ள மரம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

செட்டிகுளத்திலிருந்து வவுனியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருந்த இ.போ.ச பேருந்து மீதே இவ்வாறு மரம் விழுந்துள்ளது.

எனினும் இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இ.போ.ச பேருந்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அப்பகுதியிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.