தற்காலிகமாக மூடப்படும் திரையரங்குகள்

Report Print Steephen Steephen in சமூகம்

நாடு முழுவதும் இயங்கும் அனைத்து திரையரங்குகளையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், அரசாங்கம் மற்றும் சுகாதார துறையினர் பொது மக்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாகவே திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.