முரளிக்கு அச்சுறுத்தல் எனில் இலங்கை அரசு பாதுகாப்பை வழங்கும்: சுப்ரமணியம் சுவாமி

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதனுக்கு அழிந்து போன விடுதலைப் புலிகள் அமைப்பினால் அச்சுறுத்தல் ஏற்படுமாக இருந்தாலும் அவருக்கு இலங்கை அரசாங்கம் போதுமான பாதுகாப்பை வழங்கும் என நம்புவதாக இந்திய பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மாநிலங்கள் அவையில் உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

உலகின் மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதனுக்கு தனது முழுமையான ஆதரவு கிடைக்கும் எனவும் அவரை இந்தியாவுக்கு அன்புடன் வரவேற்பதாகவும் சுப்ரமணியம் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய திரைப்பட நடிகர் விஜய் சேதுபாதி, முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் நடிப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முரளிதரன், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர் என்பதால், அவரது பாத்திரத்தில் நடிக்கக் கூடாது என விஜய் சேதுபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், சுப்ரமணியம் சுவாமி இந்த டுவிட்டர் பதிவை இட்டுள்ளார்.


You may like this video.......