விதுர விக்ரமநாயக்கவின் கீழ் இருந்து 'அபே கம' நிறுவனம் நீக்கம்

Report Print Ajith Ajith in சமூகம்

பத்தரமுல்லையில் உள்ள “அபே கம” நிறுவனம் தேசிய பாரம்பரியக்கலைகள் மற்றும் கிராமப்புற கலைஞர்களின் ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் கீழ் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

“அபே கம” என்பது பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய அருங்காட்சியகம் மற்றும் பழமையான கிராம வீடுகளுடன் கைவினைப்பொருட்கள் கொண்ட நிகழ்வுகள் நடைபெறும் இடமாகும்.

இந்தநிலையில் குறித்த துறை தமது அமைச்சில் இருந்து செப்டம்பர் 25ஆம் திகதி நீக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், ஜனாதிபதியின் விருப்பப்படி அது மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைச்சில் இருந்து குறித்த நிறுவனத்தை அகற்றுவதால் எந்த சிக்கலும் இல்லை. இந்த மாற்றம் ஒரு சாத்தியமான காரணத்தால் நடந்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தாமரை கோபுரம், டவர் மண்டபம், மலையக பாரம்பரிய தளங்கள் மற்றும் தேசிய அருங்காட்சியகம் ஆகியவை தமது அமைச்சின் கீழேயே உள்ளதாக ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.