ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடைகள், மருந்தகங்கள் நாளை திறக்கப்படும்

Report Print Kamel Kamel in சமூகம்

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாளைய தினம் கடைகள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

நாளைய தினம் காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் கடைகள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா உள்ளிட்ட சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுதப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களில் கடந்த 13ம் திகதி முதல் கடைகள் மற்றும் மருந்தகங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.