தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று கிராமங்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

மினுவாங்கொட காவல்துறைக்கு உட்பட்ட மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனிஹிமுல்ல, பேரலன்டாவத்த மற்றும் ஹெலாகந்தான ஆகிய பிரதேசங்களே இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பிரதேசங்களில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் நெருங்கியவர்கள் அதிகமான அளவில் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டமையை அடுத்தே தனிமைப்படுத்தல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று மாத்திரம் மினுவாங்கொட தவலபொல சந்தைப்பகுதியில் சுமார் 500பேருக்கு பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.