களுத்துறை சிறை வளாகத்தின் சுவர்களுக்கு வெளியில் இருந்து சிறைச்சாலைக்குள் எறியப்பட்ட பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய இதனை தெரிவித்துள்ளார்.
08 கையடக்க தொலைபேசிகள், 10 மின்கலங்கள், 05 சிம் அட்டைகள், 04 தொலைபேசி கட்டண அட்டைகள் மற்றும் 40 புகையிலை துண்டுகள் என்பன இதில் அடங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு காற்சட்டைகளில் போர்த்தப்பட்ட நிலையில் இரண்டு பொட்டலங்களில் இந்த பொருட்கள் சிறைச்சாலைக்குள் எறியப்பட்டிருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.