பாணந்துறை வடக்கில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் படுகாயம்

Report Print Ajith Ajith in சமூகம்

பாணந்துறை வடக்கு- ஹெனமுல்லா சந்திப்பில் இரண்டு அதிவேக மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரி (ஓ.ஐ.சி) மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் இடம்பெறுவதாக பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை அதிகாலை 1.00 மணியளவில் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீப்பை சாலையில் நிறுத்திவிட்டு சற்று முன்னோக்கி பயணித்தபோது திடீரென பந்தயங்களில் ஈடுபட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவருடன் மோதியுள்ளது.

மற்றொரு மோட்டார் சைக்கிளும் கட்டுப்பாட்டை இழந்து பொலிஸ் ஜீப்பின் முன்புறத்தில் மோதியுள்ளது.

இதனையடுத்து இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.