இலங்கையின் கொரோனா நிலவரம்! வெளியான அறிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா தொற்றாளிகள் தொடர்பில் மேலும் 19 பேர் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் ஒன்பது பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.

10 பேர் தொற்றாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தபோது தொற்றாளிகளாக இனங்காணப்பட்டவர்களாவர் என்று கொரோனா தடுப்பு தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இந்த 19 பேரையும் சேர்த்து மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1789ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாத்திரம் 68 தொற்றாளிகள் இனங்காணப்பட்டனர்.

இதற்கிடையில் இலங்கை முழுவதும் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 5244 ஆக உயர்ந்துள்ளது. 1851பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.