கொரோனா தொற்றுக்கு எதிராக மேர்வின் சில்வா சத்தியாக்கிரக போராட்டம்!

Report Print Murali Murali in சமூகம்

நாட்டு மக்களும் கொரோனா தொற்றிலிருந்து சுகம்பெற வேண்டும் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

அண்மையில் அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

களனி – தலுகம – புலுகஹசந்தி பிரதேசத்திலுள்ள உத்பலவர்ண ஸ்ரீ ரங்கநாத விஷ்ணு கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்ட அவர் அதனைத் தொடர்ந்து அந்த ஆலயத்திற்கு முன்பாக அமர்ந்திருந்தவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

தனக்கு வாக்களித்த களனி பிரதேச மக்கள் உட்பட ஒட்டுமொத்த கம்பஹா மாவட்டத்திலுள்ளவர்களும் அதேபோல நாட்டு மக்களும் கொரோனா தொற்றிலிருந்து சுகம்பெற வேண்டும் என்பதே தனது இந்த போராட்டத்திற்கான நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.