கம்பஹா மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை!

Report Print Ajith Ajith in சமூகம்

கம்பஹா மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரம் பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

இதில் இன்னும் 7020 பேருக்கான முடிவுகள் வெளியாகவில்லை என்று பிராந்திய சுகாதார அலுவலர் வைத்திய கலாநிதி மிகாரா ஏபா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 39 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். 16 பேர் தொழில்சாலைகளுக்கு வெளியே கண்டறியப்பட்டனர்.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் கம்பஹாவின் 89 தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக பிராந்திய சுகாதார அலுவலர் வைத்திய கலாநிதி மிகாரா ஏபா தெரிவித்துள்ளார்.