திருமண வீட்டிற்கு சென்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுமுல்ல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட 60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மொரட்டுமுல்ல மற்றும் வில்லோராவத்தை பிரதேசத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின்கு குடும்ப உறுப்பினர்கள் உட்பட 100 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


you may like this video,