குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்:மஸ்தான் எம்.பி

Report Print Theesan in சமூகம்

மிகவும் அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும் செயற்படும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையினை பிரயோகிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனைகளைப் பெற வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பிற்கு சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், க.குமணன் ஆகியோர் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டித்து காதர் மஸ்தான் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறுப்பட்ட கஷ்டங்கள், சிரமங்களுக்கிடையே அர்ப்பணிப்போடு ஊடக தர்மங்களை பேணி கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்பட்டு நாட்டின் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.