மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

மினுவாங்கொட கொரோனா கொத்தணியின் ஆரம்பம் தொடர்பில் ஆய்வு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிததுள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பம் தொடர்பில் இதுவரையில் மேற்கொண்ட பல பரிசோதனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த ஒருவருடன் தொடர்பில் இருந்தவரால் கொரோனா வைரஸ் பிரென்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் பரவியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்து வரும் சில தினங்களில் கொரோனா பரவலின் உண்மைத்தன்மை கண்டுபிடிக்கப்படும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரென்டிகஸ் கொத்தணி பரவலை தடுப்பதற்காக, தொற்றாளர் என சந்தேகிப்பவர்களை கண்டுபிடிப்பத்து அவர்களை பாதுகாப்பதற்கு புலனாய்வு பிரிவினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.