தனியார் பாதுகாப்பு முகவரக சேவை மற்றும் சுடுகலங்கள் ஆகியவற்றுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணிகள் இடைநிறுத்தம்

Report Print Ajith Ajith in சமூகம்

தனியார் பாதுகாப்பு முகவரக சேவை மற்றும் சுடுகலங்கள் ஆகியவற்றுக்கான 2021 ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை அடுத்து தமது அமைச்சுக்கு வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளது.

இதேவேளை, பல்வேறு அரச நிறுவனங்களும் தமது கட்டடத்தொகுதிக்கு அதிகமானோர் வருவதை தடுக்கும் முகமாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

இந்நிலையில்,உயர்நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கும் நேற்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.