கைதிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் தொலைபேசி அழைப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தமது வீடுகளுக்கு இலவசமாக தொலைபேசி அழைப்பை எடுத்து உரையாடும் சந்தர்ப்பம் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக கைதிகளை சந்திக்க அவர்களின் உறவினர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்கு இலவச தொலைபேசி சேவையை வழங்குமாறு டெலிகொம் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கைதிகளின் உணவு மற்றும் ஏனைய தேவைகள் குறித்து கவனமாக இருக்குமாறு சிறைச்சாலை நிர்வாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.