சுற்றுலா வழிக்காட்டிக்கு கொரோனாா - திருமணத்திற்கு சென்றதாக தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா வழிக்காட்டி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா வழிக்காட்டியே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வேறு நோய் அறிகுறிகளை கூறியே குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதியாகியுள்ளது.

இந்த நபர் யால தேசிய வனவிலங்கு பூங்காவிற்கு அருகில் உள்ள ஹோட்டலில் சுற்றுலா வழிக்காட்டியாக அவர் பணியாற்றியுள்ளார்.

அவர் சென்ற திருமண நிகழ்வு ஒன்றிலேயே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றுலா வழிக்காட்டில் சென்ற திருமணத்திற்கு மினுவாங்கொட பிரென்டிக்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடையவர்கள் வருகைத்தந்திருந்ததாக புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் ஊடாக இந்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளதென இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.