மொறட்டுவையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளியினால் குசகினிவத்த பிரதேசம் முடக்கம்

Report Print Steephen Steephen in சமூகம்

மொறட்டுவை குசகினிவத்த பிரதேசத்தை மூடுவதற்கு பொலிஸாரும், சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதான கொரோனா தொற்றாளரான பெண் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளரான இந்த பெண் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் நடந்த மங்கள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளதாகவும், அவருடன் சுமார் 170 பேர் பேருந்தில் சென்று இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த பெண்ணுடன் குறித்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் மேலும் இருப்பார்கள் எனில், அவர்கள் அது குறித்து அறிவிக்குமாறு மொறட்டுமுல்ல பொலிஸாரும், மொறட்டுவை மாநகர சபையும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.