வவுனியாவில் தனிமையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் சம்பவத்தினத்தன்று, உக்கிளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் தனிமையில் இருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் வாயில் இருந்து ஒருவகை நுரை வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.