மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இருவர் பலி! கண்டியில் சம்பவம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

கண்டி, தர்மசோகா மாவத்தையில் உள்ள துணிக் கடையொன்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மின்தூக்கி இன்றையதினம் உடைந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தில் பராமரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த இரு மேசன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்போது, 54 வயதுடைய குருகெதர அரவிந்த மற்றும் 57 வயதுடைய உபாலி ஜெயரத்ன என்ற இருவரே உயிரிழந்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.