பண்டார வன்னியன் சிலை அமைந்துள்ள பகுதி பண்டார வன்னியன் சதுக்கமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இருந்து மன்னார் வீதி மற்றும் யாழ். வீதி செல்லும் பண்டார வன்னியனின் சிலை அமைந்துள்ள பகுதி பண்டார வன்னியன் சதுக்கமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் கோரிக்கையை ஏற்று நகரசபை உறுப்பினர் ரி. கே. இராசலிங்கம் நகரசபை அமர்வில் முன் வைத்த கோரிக்கையை ஏற்று நகரசபை குறித்த பெயரை சூட்டியுள்ளது.

குறித்த பகுதி இதுவரை காலமும் பெற்றோல் செட் சந்தி என அழைக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த பகுதிக்கு பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர் சூட்டுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.