நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Report Print Jeslin Jeslin in சமூகம்

நாட்டில் மேலும் 61 கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களுள் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 58 பேர் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் மூவர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பிலான தொற்றாளிகளின் எண்ணிக்கை 1850ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இலங்கைக்குள் மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 5305ஆக உயர்ந்துள்ளது.