யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கைக்குண்டுடன் இளைஞரொருவர் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கைக்குண்டொன்றுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரை பொலிஸார் சோதணைக்கு உட்படுத்திய போது அவரது உடமையில் இருந்து கைக்குண்டொன்றினை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.