செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா என சந்தேகம்! ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

Report Print Steephen Steephen in சமூகம்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 13 ஆம் திகதி முற்பகல் 9.30 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட செய்தியாளர் ஒருவர் கொரோனா தொற்றாளர் என சந்தேகிப்பதாகவும் இது சம்பந்தமாக தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அனைத்து செய்தியாளர்களின் விபரங்களையும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் சுகாதார பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிக்காட்டல்களை சுகாதார பிரிவினர் செய்தியாளர்களுக்கு துரிதமாக வழங்குவார்கள் எனவும் தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

கொரோனா தொற்றாளர் என சந்தேகிக்கப்படும் செய்தியாளரின் சுகாதார பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அனைத்து செய்தியாளர்களும் வெளிசமூகத்துடன் கலக்காது பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறும் தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.