தீப்பற்றி எரிந்த கப்பலின் தலைவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயண தடையை நீக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் கிழக்கு சங்கமன் தீவுக் கடலுக்கு அப்பால் தீப்பிடித்த கச்சா எண்ணெய் கப்பலின் தலைவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயண தடையை நீக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கப்பலின் தலைவரான கிரேக்க நாட்டை சேர்ந்த ஸ்டீரியோ ஸ்டெரியோ இலேயாஸ் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு தலைமை நீதவான் மொஹமட் மிஹார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்போது தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தமது கட்சிக்காரர் ஏற்றுக்கொண்டதாக கப்பலின் தலைவரின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த புதன்கிழமை விதிக்கப்பட்ட 12 மில்லியன் ரூபாவையும் அவர் செலுத்திவிட்டதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து ஸ்டெரியோ இலேயாஸ்க்கு எதிரான வெளிநாட்டு பயண தடையை நீதிவான் நீக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.