வடக்குக் - கிழக்கில் தமிழிற்கு முதலிடம்! சிங்களவர்கள் இந்தியாவிற்குச் சொந்தம்! தேரர் பகீர் தகவல்

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு விகாரை பிக்குவுக்கு நீதிமன்றத்திலிருந்து தமிழ் மொழியில் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் பிரதேசம் என்றதால் சிங்கள மொழியில் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்படாதுதானே என பௌத்த துறவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அல்லது தமிழ் மற்றும் சிங்கள மொழி என இரண்டு மொழிகளிலும் அனுப்பிவைக்கப்பட்டிருக்க வேண்டும். பெரும்பான்மையாக தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்தால் அல்லது 20 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டில் இருப்பதால் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

அதேபோல தேசிய கீதத்தில் உள்ள வரிகள் தமிழ் மொழியிலும் போடப்பட வேண்டும். இந்த நாட்டு மக்கள் அவர்கள். இங்கே பிறந்தவர்கள். இங்கேதான் வர்த்தகம், தொழில் செய்கிறார்கள். சிங்கள மொழி பேசுகிறதால் அவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அல்லர். மக்கள்தானே அனைவரும். பௌத்த மக்கள் என நாங்கள் இதுபற்றி விசேடமாக சிந்திக்க வேண்டும். இதனை கூறினால் சிங்கள பௌத்தவாதம் எனக் கூறுகிறார்கள்.

சிங்கள பௌத்தம் பற்றி விளக்கம்கொடுக்க இந்த நாட்டில் பலரும் இருக்கின்றார்கள். எனவே புத்த பகவானின் போதனைப்படி இதனை அனைத்து பௌத்த சிங்கள மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டில் சிங்களம் பேசுகின்ற மக்கள்தான் நாங்கள். நானும் அப்படியே. பெரும்பான்மை மக்களும் அப்படியே. எமது நாட்டில் 20 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றனர்.

பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களும் இருக்கின்றனர். நாம் அனைவரும் இந்தியாவிலிருந்து வந்த போதிலும் இந்த நாட்டிற்கு சொந்தமானவர்கள்.

சிங்களவர்களே முதலில் இங்கே வந்தார்கள். விஜய மன்னன் பின்னரே பௌத்த மதமும் வந்தது. மாறாக இது இந்தியாவின் இன்னுமொரு மாநிலமல்ல. 88,89களில் இந்தியாவின் இன்னுமொரு மாநிலமாக மாற்றிக்கொள்வதற்காக வானிலிருந்து பருப்பு, அரிசி, கிழங்கு உள்ளிட்ட பொருட்களை வீசினார்கள். அதற்கெதிராக புரட்சிகள் வெடித்ததோடு சிங்கள பௌத்த இளைஞர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள்.

இது புறம்பான இராச்சியம். இங்கே தமிழ், சிங்களம் என பிரித்துப் பேசக்கூடாது. இலங்கையர் என்கிற அபிமானத்தை நாங்கள் உருவாக்க வேண்டும். சிங்களம் - தமிழ் என பிரித்துப் பேசினால் எதிர்காலம் பாழாய்ப்போய்விடும். நம் அனைவரும் இலங்கையர்கள் என்கிற சக்தியை பலப்படுத்த வேண்டும்.

அது இன்று இல்லை. ஆதலால்தான் அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுக் தலையீடு செய்கின்றன. தங்களது பிள்ளைக்கு உரிய நேசமே மற்றைய தமிழ், சிங்கள பிள்ளைகள் மீதும் இருக்க வேண்டும். அனைவரும் சுதத்திரத்திற்கு விருப்பம். அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்கிற புத்தபெருமானின் போதனைப்படி வாழ வேண்டும் என்கிற போதனையையே நானும் வழங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.