ரியாஜ் பதியுதீனின் மேன்முறையீட்டு மனுவுக்கு எதிராக மனு தாக்கல்

Report Print Ajith Ajith in சமூகம்

தாம் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் மேன்முறையீட்டு மனுவுக்கு எதிராக இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கர்தினால் மல்கத் ரஞ்சித் சார்பாக கொழும்பு-செத் சரண கெரிட்டாஸ் நிறுவன பணிப்பாளர் வணக்கத்துக்குரிய தந்தை லோரன்ஸ் ராமநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

காவல்துறையின் பேச்சாளர், செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ரியாஜ் பதியுதீனுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவரை குற்றப்புலனாய்வுத்துறையினர் விடுதலை செய்தமையானது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மனுதாரரான கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரியாஜ் பதியுதீனின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி ஒன்றை தருமாறு ரியாஜ் பதியுதீனின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா கோரினார்.

இந்தநிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி இந்த மனுவை அழைப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்தது.

ரியாஜ் பதியுதீன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் செப்டம்பர் 29ஆம் திகதியன்று போதிய சாட்சியங்கள் இல்லையென்று கூறப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.