நாட்டில் தீவிரமடையும் கொரோனா! மேலும் 49 பேர் அடையாளம் காணப்பட்டனர்

Report Print Kamel Kamel in சமூகம்

மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 1889 ஆக உயர்வடைந்துள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 49 பேர் இந்த கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 35 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தவர்கள் எனவும், ஏனைய 14 பேரும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்பு பேணியவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 5354 ஆக உயர்வடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.