உயர் தரப் பரீட்சைகள் நடக்கும் தினத்தில் மாற்றமில்லை - கல்வியமைச்சு

Report Print Steephen Steephen in சமூகம்

நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமையில், பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர் தரப் பரீட்சைகளை தொடர்ந்தும் வெற்றிகரமான நடத்த முடியும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இன்று தெரிவித்துள்ளார்.

உயர் தரப் பரீட்சைகளை நவம்பர் 6ஆம் திகதி வரையும் நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ள பரீட்சை நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து சிரமங்கள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, திறைசேரியுடன் கலந்துரையாடி நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.