தெஹிவளை சந்தையில் மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு கொரோனா - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

இரத்மலானை கந்தவல வீதியில் வசிக்கும் 63 வயதுடைய பெண் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றியமை உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கொழும்பு IDH வைத்தியசாலைக்கு அவர் மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த பெண் தெஹிவளை கரகம்பிட்டிய வாராந்த சந்தையில் மீன் விற்பனையில் ஈடுபட்டவர் எனவும் அந்த பெண்ணிடம் மீன் கொள்வனவு செய்ய வந்தவர்கள் இருப்பின் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இந்த பெண் தெஹிவளையில் அமைந்துள்ள தனியார் பல் வைத்திய நிறுவனத்திற்கும் சென்று சிகிச்சை பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த பெண் வாழும் சந்துன்கம செஞ்சிலுவை வீட்டு தொகுதியில் 10 வீடுகளை சேர்ந்த 34 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த பெண்ணுக்கு அருகில் பழகிய மேலும் 4 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் மாதம்பே தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை - கல்கிஸ்ஸ நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர், சுகாதார பரிசோதகர் அலுவலக அதிகாரிகள் மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸார் இணைந்து இது தொடர்பில் தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

You may like this video