கேகாலை - ரம்புக்கன பகுதியில் 6 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன!

Report Print Ajith Ajith in சமூகம்

கேகாலை, ரம்புக்கன பகுதியில் 6 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன. 36 அகவையைக்கொண்ட பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்ட பின்னரே இந்த முடக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் குமார் விக்கிரமசிங்கவின் தகவல்படி, குறித்த பெண் காத்தான்குடி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இதேவேளை ரம்புக்கன - பின்னவல தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து ஒருவர் கொரோனாவுடன் கண்டறியப்பட்டார். அவர் இரணைமடு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஈரியகொல்ல, அம்புல் -அம்பே, பொரலுவ, வேரலகம, அலவத்த மற்றும் கிரிவாலாப்பிட்டிய ஆகிய கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.