புத்தளம்- ஆனமடுவ பகுதியில் குளவித் தாக்குதல் காரணமாக ஒருவர் பலி!

Report Print Ajith Ajith in சமூகம்

புத்தளம்- ஆனமடுவ பகுதியில் குளவித் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் மேலும் ஐந்துபேர் காயமடைந்தனர்.

உந்துருளியின் மூலம் மீன் வியாபாரம் செய்து வந்த 65 அகவைக்கொண்ட ஒருவரே குளவித்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குளவிக்கூடு இருந்த இடத்தில் நின்று மீன் விற்பனையில் ஈடுபட்டபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்போது திணறிப்போன மீன் வியாபாரி அருகில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து குளவித்தாக்குதலில் இருந்து பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற முயற்சித்தவர்களையும் குளவிகள் தாக்கியுள்ளன. இதனால் ஐந்துபேர் காயமடைந்தனர்.

இந்தநிலையில் மீன் வியாபாரி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.