கட்டுநாயக்கவில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது குறித்து கவனம்!

Report Print Kamel Kamel in சமூகம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இரண்டு ஆடைக் கைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் நாட்களில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தீர்மானித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை வரையில் 79 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இதுவரையில் கம்பஹா மாவட்டத்தில் 1483 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.