இலங்கையின் கொரோனா நிலவரம் - வெளியான அறிக்கை!

Report Print Ajith Ajith in சமூகம்

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா தொற்றாளிகள் தொடர்பில் மேலும் 49 பேர் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 35 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் ஏனைய 14 பேர் தொற்றாளிகளுடன் நெருங்கிய நிலையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 1899 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இன்று மாத்திரம் இலங்கைக்குள் 110 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கையும் 5354 ஆக உயர்ந்துள்ளது. வைத்தியசாலைகளில் 1956 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று 5 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்துள்ள தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 3385ஆக உயர்ந்துள்ளது.