ரோஸி சேனாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகளுக்கு பரிந்துரை!

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனாநாயக்க, மாநகர ஆணையாளர் ரோஷனி திசாநாயக்க மற்றும் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் அனைவரும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாநகர தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபைக்குள் கொரோனா தொற்றாளி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கொரோனா பரவல் காரணமாக ஆக்டோபர் 31ம் தேதி வரை பொதுமக்கள் அதன் மாநரக கட்டிடத்திற்குள் நுழைவதை கட்டுப்படுத்த கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களை கொழும்பு மாநகர சபை அறிமுகப்படுத்தியுள்ளது: 011-5676346, 077-039 9825, 017-9232433, 071-8234717