ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Report Print Ajith Ajith in சமூகம்

ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும் அதன் பிராந்திய அலுவலகங்களும் பொது மக்கள் பணிகளுக்காக எதிர்வரும் 23ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவசர சேவைகள், வேறு வழிகளில் மேற்கொள்ளப்படும்.

எனவே அவசரத் தேவை ஏற்படும்போது பொதுமக்கள், 0115226126, 0115226115, 0115226100, 0115226150 என்ற இலக்கங்களில் தொடர்புக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் கேட்டுள்ளது.