தாம் கைது செய்வதை தடுக்குமாறு கோரி ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு!

Report Print Ajith Ajith in சமூகம்

தாம், கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவுக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

செயல் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வுத் துறையின் துணைமா அதிபர் உட்பட்டவர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடக்கு மீள்குடியேற்றத்திட்டத்தின் இயக்குனர் மொஹமட் யாசீன் சம்சுதீன் மற்றும் திட்ட கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகியோர் 2019 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 9.5 மில்லியன் ரூபா சொத்துகளை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில் அழகரத்னம் மனோரஞ்சனை காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர். எனினும் ரிசாத் பதியுதீன் மற்றும் சம்சுதீன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.

இந்த நிலையிலேயே தம்மை கைதுசெய்வதை தடுக்கும் உத்தரவை கோரி ரிசாத் பதியுதீன், சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று மனுத்தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.