கொழும்பு மாநகரசபையில் 132 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை! எவருக்கும் தொற்று இல்லையென உறுதி

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு மாநகரசபையில் 132 பேர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

கொழும்பு பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி தினுக குருகே இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மாநகரசபையின் அறக்கட்டளை ஆணையாளர் அலுவலகத்துடன் தொடர்புடைய 42 பேர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே இந்த அறக்கட்டளை ஆணையாளர் அலுவலகத்தில் ஒருவர் கொரோனா தொற்றாளியாக கண்டறியப்பட்ட பின்னரே அங்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் குறித்த அறக்கட்டளை ஆணையாளர் அலுவலகமும் மூடப்பட்டுள்ளது.