யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்! கார் ஒன்று சேதம்

Report Print Ajith Ajith in சமூகம்

யாழ்.கோண்டாவில் கிழக்கு - அரசடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று இரவு 8.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டு கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும், வீட்டின் கதவு, ஜன்னல்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.