யாழில் மதில் இடிந்து வீழுந்ததில் ஒருவர் பலி! இருவரை தேடி பொலிஸார் வலைவீச்சு

Report Print Ajith Ajith in சமூகம்

யாழ்ப்பாணம்- அரியாலையில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை தேடி தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - அரியாலை கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் மதில் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்தவர் நெல்லியடி பகுதியை சேர்ந்த 45 அகவையைக்கொண்டவராவார். இந்நிலையில் அவருடன் மேலும் இருவர் மணல் அகழ்வில் ஈடுபட்டதாக விசாரணையின்போது தெரியவந்தது.

இதனையடுத்தே அவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.