20 தற்கொலைத் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருந்த சஹ்ரான் குழு

Report Print Kamel Kamel in சமூகம்
140Shares

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழு 20 தற்கொலைத் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருந்தது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

20 தற்கொலைப் குண்டுதாரிகளை கொண்டு இந்த தாக்குதல்களை நடாத்த திட்டமிடப்பட்டிருந்ததாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

முதல் தாக்குதல்களின் பின்னர் மூன்று கட்டங்களாக தொடர் தாக்குதல்களை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

சஹ்ரான் குழுவின் பிரதிநிதியொருவரிடம் நடாத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் சாட்சியமளித்த பொலிஸ் உத்தியோகத்தர் இந்த தகவல்களை ஆணைக்குழுவின் எதிரில் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த இயக்கத்தின் தலைமைப் பதவி தொடர்பில் சஹ்ரானுக்கும் நவுபர் மௌவி என்பவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.