நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் சுகாதாரத்துறை

Report Print Kamel Kamel in சமூகம்
315Shares

அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறையினர் நிர்ணயம் செய்வார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பிராந்திய சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைகளுக்கு அமைய தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் எத்தனை பணியாளர்களை கடமையில் ஈடுபடுத்த முடியும் என்பது குறித்து நிர்ணயிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று நிலைமையினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணியிடங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் உடல் வெப்ப நிலை கட்டாயமாக பரிசோதனை செய்யப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட ஏனைய சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் மேலும் கூறப்பட்டுள்ளது.